Friday, August 12, 2011

பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா

நேற்றைய தினமணி (11-08-2011) நாளிதழிலிருந்து விவசாய தகவல்கள் சில.......

பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா

பார்த்தீனியம் செடிகள் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட வலைத்தலங்களைப் பார்க்கவும்:

http://ta.wikipedia.org/wiki/பார்த்தீனியம்பார்த்தீனியம்


பார்த்தீனியம் அல்லது பார்தினியம் என்பது ஒரு குறுஞ்செடியாகும். இவைகளை காரட் க்ராசு (மல்லிக்கிழங்குப்புல்) அல்லது கசார் கச் என விளிக்கின்றனர். இவை செடிகளின் 'நட்சத்திர' குடும்பமான ஆச்டெரேசியே வகைப் பூந்தாவரமாகும். பார்த்தீனியம் அர்செண்டேடம்பா. இங்கானம் மற்றும் பா. இச்டெரோபோரசுஆகியன இக்குடும்பத்தில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாகும். இவை களைகளாய் விளைநிலங்கள், சாலையோரங்களில் செழித்துக் காணப்படுகின்றன.

பண்புகள்
நன்கு (3-4 அடி) வளரக்கூடிய ஆழ்வேர்களைக் கொண்ட பூக்களாள் நிறுவப்பட்ட தாவரமாகும். இவைகளில் நன்கு அறியப்பட்ட பா. இச்டெரோபோரசு நட்சத்திரம் போன்ற வெண்பூக்களால் படரப்பட்ட தாவரமாகும். இவை அந்நியச் செடி (அமெரிக்கா பூர்வீகம்) ஆனால் நம் நாட்டில் இவை களையாக உருவெடுத்துள்ளது. இவை ஐப்பசி-கார்த்திகைகளில் அடர்ந்து வளர்கின்றன. இவ்வாறு வளரும் போது இவை பூந்தாதுக்களை அதிகமாய் உற்பத்தி செய்து காற்றில் பரவவிடுகின்றன. ஆதலால் இவை பேருயிர்களின் சுவாசக் குழலுக்குள் சென்று ஒவ்வாமையை ஊக்குவிக்கின்றன.

பயன்கள்

இவைகளில் பா. அர்செண்டம் அமெரிக்க நாடுகளில் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வட அமெரிக்காவைச் சேர்ந்த சிகரில்லா அபச்சி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தீமைகள்

இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். காரணம். அந்நிய நாட்டில் எந்தவொரு தாவரமும் களைதான். உதாரணம் ஆசுதிரேலியாவில் 70% அதிகமாக அந்நிய செடிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதைத் தடுக்க அந்நாடு வெளிநாடுகளிலிருந்து செடிகளை இறக்குவதில் தடை விதித்துள்ளது. அதேபோல் இத்தாவரமும் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இவை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோலாறுகளையும் ஒவ்வாவையும் ஏற்படுத்துகின்றன.

நோய்கள்

இவை சருமநோயான சருமவழல், சொறி/கரப்பான் நோயை உண்டாக்குகின்றன - பா. இச்டெரோபோரசு. இவை ஆச்துமா என அறியப்படும் ஈளநோய்/ஈழைநோயையும்; குருதிசெவ்வனு நலிவு (ஈசினோபீலியா) எனப்படும் நோயை உண்டாக்குகிறது. இதனால் வகை 1 மிகையுணர்வூக்கம் தோற்றத்திற்கும் வழிகோறுகிறது.

காரணங்கள்

சூழ்நிலை மாற்றம் பயிர்களை எதிர்த்து வளரத்தூண்டுகிறது. இவைகளுக்கு இயற்கையாகவே கட்டுப்படுத்துவதற்கு இயற்கையெதிரி ஒன்று இயங்கி வரும் ஆனால் அவை இங்கு காணப்படாததால் தடையின்றி வளர்ச்சி. விழிப்புணர்ச்சி இன்மையால் மனிதன் இதுபோல் கொண்டு வந்த தாவரங்கள் சிலவெங்காயத்தாமரை, முட்செடி ஆகியன.

அழிக்க வேண்டியதன் நோக்கம் மற்றும் முறைகள் சில

இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில் இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெறிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வினமே அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. இவைகளை அழிக்கச் செடிகளைப் பிடுங்கிப் பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு குழிகளை மூடுவதன் மூலம் இக்களைகளை நாமழிக்கமுடியும்.

ஒரேயடியாக அழிப்பதென்பது சாத்தியமில்லா ஒன்று ஆகையால் இவைகளை தழைச்சத்தாக பயிர்களுக்கு இடுவதன் மூலமும் இவைகளைக் கட்டுப்படுத்தமுடியும்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  1.  "GENUS Parthenium". Taxonomy. UniProt. பார்க்கப்பட்ட நாள் 2010-10-29.
  2.  "Genus: Parthenium L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1998-09-03). பார்க்கப்பட்ட நாள் 2010-10-29.

No comments:

Sharing

முதன்மை நாட்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...